• Thu. Jun 18th, 2026

editor

  • Home
  • கோட்டபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கைது!

கோட்டபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசாங்க நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை விடுதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு 1008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதிக் கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக 1008 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் தற்போதுள்ள 126 விடுதிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதனாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள்…

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட…

யோஷித ராஜபக்ஷ கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு யோஷித ராஜபக்ஷவைக் கைது செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டில் அவர் கடற்படையில் சேர்ந்தது மற்றும் 2007-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கடற்படை அகாதமியில் சிறப்புப் பயிற்சிக்காகச் சேர்ந்தது தொடர்பாக அவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல்…

உலகக்கோப்பையில் அல்ஜீரியாவுக்கு எதிராக 03 கோல் அடித்து ஹாட்ரிக் (hat-trick) சாதனை படைத்தார் லியோனல் மெஸ்ஸி!

லியோனல் மெஸ்ஸி தனது கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையில் அல்ஜீரியாவுக்கு எதிராக 03 கோல் அடித்து ஹாட்ரிக் (hat-trick) சாதனை படைத்தார்.!⚽️ கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) தொடரில்…

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனுத்தாக்கல்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக…

வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜூன் 20 முதல் சாரதிகள் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிவது தொடர்பான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைவரும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும்…

கம்பஹாவின் பல பகுதிகளில் 19 மணித்தியால நீர்வெட்டு!

அத்தனகல்ல கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (16) முற்பகல் 8.00 மணி முதல்…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை 6000 ரூபாய் அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று…

நாட்டின் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி!

இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…