
விண்கலத்திற்குள் சென்று முதற்கட்டப் பரிசோதனைகளைச் செய்த மருத்துவ அதிகாரிகள், குழுவின் நான்கு உறுப்பினர்களும் ‘பச்சை’ நிலையில் (முழு ஆரோக்கியத்துடன்) இருப்பதாக உறுதிப்படுத்தினர். “இது அவர்களின் உடல்நலத்தைக் குறிக்குமே தவிர, தோல் நிறத்தைக் குறிப்பதல்ல” என நாசா அதிகாரி மேகன் குரூஸ் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் யுஎஸ்எஸ் ஜான் பி முர்த்தா கப்பல் மூலம் மீட்கப்பட்டு, தற்போது கரைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நிலவு நோக்கிய மனிதனின் அடுத்தகட்டப் பயணத்தில் இந்த வெற்றி ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
