
கடந்த சித்திரை புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலான 8 நாட்களில் இந்த வருமானம் கிடைத்துள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுராத ஹெட்டியாராச்சி வெளியிட்டுள்ளார்.
