• Sat. Oct 31st, 2026

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அன்டிகுவா பயணம்!

Oct 31, 2026

அன்டிகுவா மற்றும் பர்புடாவின் செயிண்ட் ஜோன்ஸ் நகரில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இன்று முதல் நவம்பர் 06 வரை இடம்பெறவுள்ள இவ்விஜயத்தின்போது, பிரதமர் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதுடன், உறுப்பு நாடுகளுக்கிடையிலான பொது நலன் சார்ந்த விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *